செவ்வாய், ஏப்ரல் 9

விதி !

                                        விதி ! 

முன்னொரு காலத்தில் அரசன் ஒருவன் 
வேட்டையாடுவதற்காகக் காட்டிற்குச் 
சென்றான். 

அப்போது பறவை ஒன்று இறக்கைகளைப் 
படபடவென்று அடித்தபடி கூவியது. 

பறவைகளின் மொழி அறிந்த வீரனை 
அழைத்தான் 

அவன்.இந்த பறவை என்ன சொல்கிறது?” 
என்று கேட்டான்.

அரசே! அந்தப் பறவை நம்மைப் பற்றி 
ஒன்றும் சொல்லவில்லை. 

உழவன் ஒருவன் புல் வெட்டுவதற்காக 
வருவான். 

அவன் பாம்பு கடித்து இறந்துவிடுவான் 
என்று சொன்னது!” என்றான் 

அவன்அப்போது கையில் அரிவாளுடன் 
உழவன் ஒருவன் அந்த வழியாக சென்றான். 

“பறவை சொன்னதில் பாதி நடந்து உள்ளது. 
மீதியும் நடக்கிறதா?’ என்று அறிய ஆவல் 
கொண்டான் 

அரசன். தன் வீரர்களுடன் அங்கேயே 
ங்கினான்.

மாலை நேரம் வந்தது. தலையில் புல் 
கட்டுடன் அந்த உழவன் திரும்ப வந்தான். 

இதைப் பார்த்த அரசன் குறி சொன்ன 
வீரனை அழைத்தான்.

”இந்த உழவனைப் பாம்பு கடிக்க மறந்து
விட்டதா அல்லது இவன் எமனை ஏமாற்றி
 விட்டானா? 

உன்னால் எனக்கு ஒருநாள் வீணாயிற்று. 
சாவில் இருந்து இவன் எப்படித் தப்பித்தான். 

காரணம் சொல். இல்லையேல் உன்னை 
யாரும் காப்பாற்ற முடியாது!” என்று 
கோபத்துடன் கத்தினான்.

”அரசே! பறவை சொன்ன மொழி இதுவரை 
தவறியது இல்லை. 

இவன் உயிர் பிழைக்க ஏதோ காரணம் 
இருக்க வேண்டும். 

இவனை விசாரித்தால் உண்மை தெரியும்!” 
என்றான் 

அந்த வீரன்.தலையில் புல் கட்டுடன் 
அவர்கள் அருகில் வந்தான் 

உழவன். அந்தப் புல் கட்டில் அரிவாள் ஒன்று 
செருகப்பட்டு இருந்தது.

”உழவனே! புல் கட்டைக் கீழே போடு!” 
என்றான் 

அந்த வீரன்.அவனும் புல் கட்டைக் கீழே 
போட்டான். 

புல் கட்டு விழுந்த வேகத்தில் அதைக் 
கட்டியிருந்த கயிறு அறுந்தது. 

உள்ளே இருந்த புற்கள் பரவலாக விழுந்தன. 

அதில் பாம்பு ஒன்று வெட்டப்பட்டு இறந்து 
கிடப்பது தெரிந்தது.

இதைப் பார்த்து எல்லாரும் வியப்பு 
அடைந்தனர். 

அந்த வீரன், ”அரசே! இந்தப் பாம்பு இவனைக் 
கொல்ல வந்திருக்கிறது. 

இது எப்படி இறந்தது என்று தெரியவில்லை!” 
என்றான்.

அந்த உழவனைப் பார்த்து அரசன், ”நீ புல் 
வெட்டக் காட்டிற்குள் சென்றாய். 

அங்கே விந்தையான நிகழ்ச்சி ஏதாவது 
நடந்ததா?” என்று கேட்டான்.”

அரசே! அப்படி எதுவும் நடக்கவில்லை. 
வழியில் முதியவர் ஒருவர் வந்தார். 

நான் அவரைப் பணிவாக வணங்கினேன். 
நீடூழி வாழ்க என்று என்னை வாழ்த்தினார்!

” என்றான் அவன்.

இதைக் கேட்ட அந்த வீரன், “”அரசே! அந்த 
முதியவரின் வாழ்த்துதான் இவனைக் 
காப்பாற்றி உள்ளது. 

உயர்ந்த சான்றோர்களின் சொற்கள் 
விதியையும் மாற்றும் வல்லமை வாய்ந்தவை!” 

என்றான்.அதைக் ஏற்றுக் கொண்ட அரசன் 
அந்த வீரனுக்கும், உழவனுக்கும் பரிசு 
அளித்துச் சிறப்பித்தான்.

செவ்வாய்க்கிழமை

திங்கள், ஏப்ரல் 8

பட்டத்து யானை எவ்வளவு எடை?

பட்டத்து யானை எவ்வளவு எடை?
Foto: அரசர் ஒருவருக்குத் திடீரென்று ஒரு நாள், தன் பட்டத்து யானை எவ்வளவு எடை இருக்கும் என்று அறிய ஆவல் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் எடைமேடைகள் எல்லாம் இல்லை; யானையை அளக்கும் அளவுக்குப் பெரிய தராசும் கிடையாது.

யானையின் எடையை எப்படி அறிவது.? என்று அமைச்சர்களிடம் கேட்டார் மன்னர். யாருக்கும் அதற்கான வழி தெரியவில்லை. அப்போது அமைச்சர் ஒருவரின் பத்து வயது மகன், 'நான் இதன் எடையைச் சரியாகக் கணித்துச் சொல்கிறேன்' என்றான். அதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். ஆனால், அவனுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தார் மன்னர்.

அந்தச் சிறுவன், யானையை நதிக்கு அழைத்துச் சென்றான். அங்கே இருந்த மிகப் பெரிய படகில் யானையை ஏற்றினான். யானை ஏறியதும், தண்ணீரில் ஆழ்ந்தது படகு. உடனே அவன், தண்ணீர் நனைத்த மட்டத்தைப் படகில் குறியீடு செய்தான். பிறகு, யானையைப் படகிலிருந்து இறக்கி, பெரிய பெரிய கற்களைப் படகில் ஏற்றச் சொன்னான். முன்பு குறித்து வைத்திருந்த குறியீடு அளவுக்குப் படகு தண்ணீரில் மூழ்கும் வரை, கற்கள் ஏற்றப்பட்டன. பின்பு, அரசரிடம் அந்தக் கற்களைக் காட்டி, ''அவற்றின் எடைதான் அந்த யானையின் எடை'' என்றான். அனைவரும் வியந்தனர். அவனது புத்திசாலித்தனத்தைப் போற்றிப் புகழ்ந்தனர்.

எல்லோரும் யானையை ஒட்டுமொத்த உருவமாகத்தான் பார்த்தார்கள். ஆகவே, அவர்களால் அதன் எடையைக் கணிக்கமுடியும் எனும் நம்பிக்கை வரவில்லை. ஆனால் அந்தச் சிறுவனோ, பல எடைகளின் கூட்டுத்தொகையே யானையின் எடை என்று எண்ணிச் செயல்பட்டான்; எளிதில் விடை கண்டான்.

எவ்வளவு பெரிய செயலாக இருந்தாலும், அதைச் சின்னச் சின்ன செயல்களாகப் பிரித்துக்கொள்ளவேண்டும். பிறகு, அந்த ஒவ்வொரு செயலையும், செவ்வனே செய்து முடிக்கவேண்டும். அப்போது, ஒட்டுமொத்தத் திட்டமும் அழகாக நிறைவேறிவிடும்.
அரசர் ஒருவருக்குத் திடீரென்று ஒரு நாள், தன் பட்டத்து யானை எவ்வளவு எடை இருக்கும் என்று அறிய ஆவல் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் எடைமேடைகள் எல்லாம் இல்லை; யானையை அளக்கும் அளவுக்குப் பெரிய தராசும் கிடையாது.

யானையின் எடையை எப்படி அறிவது.? என்று அமைச்சர்களிடம் கேட்டார் மன்னர். யாருக்கும் அதற்கான வழி தெரியவில்லை. அப்போது அமைச்சர் ஒருவரின் பத்து வயது மகன், 'நான் இதன் எடையைச் சரியாகக் கணித்துச் சொல்கிறேன்' என்றான். அதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். ஆனால், அவனுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தார் மன்னர்.

அந்தச் சிறுவன், யானையை நதிக்கு அழைத்துச் சென்றான். அங்கே இருந்த மிகப் பெரிய படகில் யானையை ஏற்றினான். யானை ஏறியதும், தண்ணீரில் ஆழ்ந்தது படகு. உடனே அவன், தண்ணீர் நனைத்த மட்டத்தைப் படகில் குறியீடு செய்தான். பிறகு, யானையைப் படகிலிருந்து இறக்கி, பெரிய பெரிய கற்களைப் படகில் ஏற்றச் சொன்னான். முன்பு குறித்து வைத்திருந்த குறியீடு அளவுக்குப் படகு தண்ணீரில் மூழ்கும் வரை, கற்கள் ஏற்றப்பட்டன. பின்பு, அரசரிடம் அந்தக் கற்களைக் காட்டி, ''அவற்றின் எடைதான் அந்த யானையின் எடை'' என்றான். அனைவரும் வியந்தனர். அவனது புத்திசாலித்தனத்தைப் போற்றிப் புகழ்ந்தனர்.

எல்லோரும் யானையை ஒட்டுமொத்த உருவமாகத்தான் பார்த்தார்கள். ஆகவே, அவர்களால் அதன் எடையைக் கணிக்கமுடியும் எனும் நம்பிக்கை வரவில்லை. ஆனால் அந்தச் சிறுவனோ, பல எடைகளின் கூட்டுத்தொகையே யானையின் எடை என்று எண்ணிச் செயல்பட்டான்; எளிதில் விடை கண்டான்.

எவ்வளவு பெரிய செயலாக இருந்தாலும், அதைச் சின்னச் சின்ன செயல்களாகப் பிரித்துக்கொள்ளவேண்டும். பிறகு, அந்த ஒவ்வொரு செயலையும், செவ்வனே செய்து முடிக்கவேண்டும். அப்போது, ஒட்டுமொத்தத் திட்டமும் அழகாக நிறைவேறிவிடும்.

எழுதியவர் -
திருமதி சிந்தாதேவி செல்வஜோதி (ஸ்ரீலங்கா)

நான் என்ன உன் அடிமையா..

நான் என்ன உன் அடிமையா..
Foto: கெளதமபுத்தர் ஒரு வழியில் நடந்து சென்றார்.. அப்போது எதிரே வந்த ஒருவன் மிகுந்த கோபத்துடன் புத்தர் முகத்தில் காறி எச்சிலை துப்பினான்.. தன் மேல்துண்டால் துடைத்து விட்டு.. "இன்னும் எதாவது சொல்ல விரும்புகிறாயா..?" என்றார் புத்தர். அருகில் நின்ற ஆனந்தாவுக்கு கோபம் வந்தது. புத்தர் ஆனந்தாவை பார்த்து சொன்னார் "ஆனந்தா.. இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார்.. ஆனால் அவருக்கு வார்த்தைகள் இல்லாததால் இந்த செயலை செய்து விட்டார்.. வார்த்தைகள் பலவீனமானவை இவர் என்ன செய்ய முடியும்..?" என்று கூறிவிட்டு சென்று விட்டார்.

துப்பியவனுக்கு அன்று முழுவதும் குற்றஉணர்வால் நித்திரையே வரவில்லை. அடுத்த நாள் காலை புத்தரை தேடியலைந்து கண்டு அவரது காலில் விழுந்து அழுதான்.. அப்போதும் புத்தர் ஆனந்தாவை பார்த்து சென்னார்.. "இன்றும் இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார் ஆனந்தா..! ஆனால் வார்த்தைகள் பலவீனமானதால் இச்செயலை செய்துவிட்டார்..!" என்றார். அவன் எழுந்து கேட்டான் "நான் துப்பிய போது நீங்கள் ஏன் திருப்பி ஒரு வார்த்தைகூட ஏசவில்லை..?" என்று. அப்போது புத்தர் அழகான பதில் சொன்னார்.. "நீ எண்ணியது போல் நடக்க நான் என்ன உன் அடிமையா.. ?"

கெளதமபுத்தர் ஒரு வழியில் நடந்து சென்றார்.. அப்போது எதிரே வந்த ஒருவன் மிகுந்த கோபத்துடன் புத்தர் முகத்தில் காறி எச்சிலை துப்பினான்.. தன் மேல்துண்டால் துடைத்து விட்டு.. "இன்னும் எதாவது சொல்ல விரும்புகிறாயா..?" என்றார் புத்தர். அருகில் நின்ற ஆனந்தாவுக்கு கோபம் வந்தது. புத்தர் ஆனந்தாவை பார்த்து சொன்னார் "ஆனந்தா.. இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார்.. ஆனால் அவருக்கு வார்த்தைகள் இல்லாததால் இந்த செயலை செய்து விட்டார்.. வார்த்தைகள் பலவீனமானவை இவர் என்ன செய்ய முடியும்..?" என்று கூறிவிட்டு சென்று விட்டார்.

துப்பியவனுக்கு அன்று முழுவதும் குற்றஉணர்வால் நித்திரையே வரவில்லை. அடுத்த நாள் காலை புத்தரை தேடியலைந்து கண்டு அவரது காலில் விழுந்து அழுதான்.. அப்போதும் புத்தர் ஆனந்தாவை பார்த்து சென்னார்.. "இன்றும் இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார் ஆனந்தா..! ஆனால் வார்த்தைகள் பலவீனமானதால் இச்செயலை செய்துவிட்டார்..!" என்றார். அவன் எழுந்து கேட்டான் "நான் துப்பிய போது நீங்கள் ஏன் திருப்பி ஒரு வார்த்தைகூட ஏசவில்லை..?" என்று. அப்போது புத்தர் அழகான பதில் சொன்னார்.. "நீ எண்ணியது போல் நடக்க நான் என்ன உன் அடிமையா.. ?"

எழுதியவர் -
திருமதி சிந்தாதேவி செல்வஜோதி (ஸ்ரீலங்கா)

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்